ஒரு நத்தையால் நடுவழியில் நிறுத்தப்பட்ட 30 அதிவேக புல்லட் இரயில்கள்.!

ஜப்பான் நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் அதிவேகத்தில் இயங்கக்கூடிய அதிவிரைவு இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறாக இயங்கும் இரயில்களில் புல்லட் இரயிலும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில்., கடந்த மாதத்தின் இறுதியான 30 ஆம் தேதியன்று இரயில்கள் அனைத்தும் வழக்கமாக இயங்கிக்கொண்டு இருந்த நிலையில்., திடீரென மின்சாரமானது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியில் வந்துகொண்டிருந்த இரயில்கள் அனைத்தும் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் அவர்கள் பயணித்த 30 க்கும் மேற்பட்ட இரயில்கள் நிறுத்தப்பட்டு., தற்காலிகமாக முடக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. மின்தடைக்கான காரணத்தை கண்டறிந்து பழுதுகள் நீக்கப்பட்டதும்., இரயில்கள் வழக்கம் போல இயங்க துவங்கியது.

இந்த நிலையில்., மின்தடைக்கான காரணத்தை இரயில்வே அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தாவது., முதலில் மின்தடை ஏற்பட்டதும் கருவி பழுதடைந்ததால் மின்தடை ஏற்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் அணைத்து இடங்களில் இருந்த மின்தடை கருவிகளும் சரியாக செயல்பட்டு கொண்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பான விசாரணையில் அதிகாரிகள் மேற்கொள்ளையில்., எலக்ட்ரானிக் கருவியில் நத்தை சிக்கி மின்சாரத்தால் தாக்கப்பட்டு இருந்து இருந்தது தெரியவந்தது என்று தெரிவித்தனர். இதுமட்டுமல்லாது வரும் நாட்களில் இது போன்ற பிரச்சனை ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.