சிங்களவரால் தாக்கப்பட்ட தமிழ் ஆசிரியர்….

யாழ். தெல்லிப்பளையில் வசிக்கும் விக்கினேஸ்வரன் செந்தூரன் மேல்மாகாணம் ஹொரணை வலயத்தில் குடாகங்க தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய வருகிறார்.

அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23.6 2019) பிற்பகல் 6. 30 மணியளவில் குடாகங்க தோட்டத்தில் இருந்து தென்னேன பகுதியில் உள்ள கடைக்கு குடாகங்க ஊரைச் சேர்ந்த ஒருவருடன் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் போது இடையில் வழி மறித்த சிங்கள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் வழி மறித்து “கவுத ” என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ஒருசிரியர் குடாகங்க வித்தியாலயத்தில் படிப்பிக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் “கம மொக்கத ” என்று கேட்டுள்ளார். அவர் தான் யாழ்ப்பாணம் என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த சிங்களவர் “யாப்பணய சேரட்ட மே மொக்கடதே ஆவே “என்று கேட்டு கோடாரியினால் இரு தடவைகள் முதுகில் தாக்கி உள்ளார்.

மேலும் “யாப்பணய தெமலு ” என்று கூறி அடிக்க துரத்தி உள்ளார்.

ஆசிரியர் சத்தம் இட்டதும் அயலவர்கள் ஓடிவந்து மறித்து. களுத்துறை பிம்புர வைத்திய சாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து களுத்துறை நாகொட வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குடாகங்க தோட்டத்தில் உள்ள மக்கள் அகலத்தை பொலிஸில் முறைப்பாடு செய்ததையிட்டு சம்மந்தப்பட்ட சிங்களவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று குடாகங்க மக்கள் கூறியுள்ளார்கள்.