உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 22-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை ஏதிர்கொண்டது. அந்த போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், தான் வீசிய 3-வது ஓவரின்போது கால் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார்.
இதனனையடுத்து, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்திய ஆப்கானிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியில் புவனேஷ்வர்க்கு பதில் முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு ஓய்வு எடுத்து வந்த புவனேஷ்வர் குமார் தற்போது காயத்திலிருந்து குணமாகி மீண்டும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் காயத்திலிருந்து குணம் அடைந்தாலும் அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டடீஸ்-க்கு ஏதிரான லீக் போட்டியில் பங்கேற்கமாட்டார் என இந்திய அணி தெரிவித்துள்ளது.
ஆனால் அடுத்தடுத்து வர உள்ள இங்கிலாந்து, வங்காள தேச அணிகளுடன் போட்டிகளி இந்திய அணி விளையாட உள்ள நிலையில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயத்திலிருந்து குணமாகியுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தினை ஏற்படுத்தியுள்ளது அந்த புவனேஷ்வர் குமார் போட்டிகளில் கலந்து கொள்ள அதிகம் வாய்ப்புள்ளது.
இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதும் 34-வது லீக் போட்டி நாளை(வியாழக்கிழமை, ஜூன் 27) மதியம் 3 மணிக்கு மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்தது மழை காரணமாக கைவிடப்பட்டும் 9 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்திய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.