எந்த கட்சியில் இணையப்போகிறார் தங்க தமிழ்செல்வன்???

தங்க தமிழ்செல்வன் மற்றும் டி டிவி தினகரன் இடையே சில நாட்களாக உட்கட்சி பூசல் நிலவிவருகிறது. நேற்று இது ஒரு படி மேலே சென்று இருவரும் மாறி மாறி விமர்சித்து கொண்டனர். அப்போது டிடிவி தினகரன் தங்கதமிழ்செல்வன் கட்சியை விட்டு நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை. அவரை என்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக நடுங்குவர் என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்க தமிழ்செல்வன் இன்று மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியவை, ‘ஒன் மேன் ஆர்மி’யாக டிடிவி தினகரன் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள், மீதம் உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள்.

டி டிவி தினகரன் சம்பளம் கொடுத்து கட்சியில் வேலை வாங்குகிறார்களா என்ன..? ஏன் பெட்டிப்பாம்பாக அடங்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர். கொள்கை, கோட்பாடு, லட்சியம் என மூன்றும் இல்லாத தினகரனுக்கு மூன்று நாமம்தான் கிடைக்கும். அமமுகவில் நிர்வாகம் சரியில்லை, தினகரனுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை. மேலும், எந்த கட்சியிலும் சேர நான் விரும்பவில்லை, அதிமுகவில் இருந்து யாரும் என்னிடம் பேசவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.