நாளை நடைபெறும் இந்திய போட்டி தடைபெறுமா?

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் விளையாட உள்ளது.

இதில் இரு அணி வீரர்களும் சிறப்பான முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் மேற்கிந்திய தீவுகள் அணி வரிசையாக தோல்வியை தழுவி வருகின்றது. மேற்கு இந்திய தீவு இந்தியாவை நாளை எதிர்கொள்ள உள்ளது இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சி செய்தனர்.

ஆனால் நாளை இந்த போட்டி வோல்ட் டிரபோர்ட் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த மைதானத்தில் இதற்கு முன் நடந்த போட்டியில் மழை அடிக்கடி குறுக்கிட்டது. ஆனால் தற்போது இந்த மைதானத்தில் நேற்றிலிருந்து நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் இன்று இந்திய வீரர்களால் சரியாக பயிற்சி மேற்கொள்ளவில்லை. வீரர்கள் உள் விளையாட்டு அரங்கில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அங்கு சரிவர பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இதனால் நாளை போட்டியில் மழை குறிக்கிடுமா என்று ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.