தான் செய்த தவறு தொடர்பில் மனம் திறந்தார் பில்ஹேட்ஸ்….

கணினி உலகில் காலடி பதித்து உலகின் முதலாவது பணக்காரராகவும் தடம்பதித்தவர் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்ஹேட்ஸ்.

இப்படியிருந்தும் கால ஓட்டத்தில் தான் விட்ட பெரிய தவறு தொடர்பில் அண்மையில் மனம் திறந்துள்ளார்.

அதாவது கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தினை சாராது அன்ரோயிட் இயங்குதளத்தினை தனியாக உருவாக்கியது.

இதனை மைக்ரோசொப்ட் நிறுவனமும் ஆரம்பத்தில் கண்டுகொள்ளாதிருந்தது.

எனினும் தற்போது உலக அளவில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்த அன்ரோயிட் தொழில்நுட்பத்தினை வரவேற்காதது தான் செய்த பெரிய தவறு என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் சுமார் 400 பில்லியன் டொலர்கள் வரையிலான வருமானத்தை தனது நிறுவனம் தவறவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட அன்ரோயிட் இயங்குதளமானது தற்போது உலக அளவில் மாதம் தோறும் 2 பில்லியன் இயங்குநிலை பயனர்களை (Active User) கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.