இந்தியாவில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் மாயமான நிலையில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் இறுதியில் திருமணம் நடந்தது.
இந்நிலையில் ஜூன் 1ஆம் திகதி முதல் புதுப்பெண் திடீரென மாயமானார்.
இது குறித்து பெண்ணின் கணவர் பொலிசில் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் 23 நாட்கள் கழித்து பொலிசார் அவரை ஹரியானாவில் உள்ள ஒரு வீட்டில் கண்டுப்பிடித்தனர்.
அப்போது வேறு பெண்ணுடன் அவர் வாழ்ந்து வந்ததும், இருவரும் ஓரினசேர்க்கையாளர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, தன்னுடைய தோழியை 4 ஆண்டுகளாக தான் காதலித்து வருவதாகவும், தனது விருப்பத்துக்கு மாறாக தனக்கு திருமணம் நடந்ததாகவும் புதுப்பெண் கூறினார்.
பின்னர் இருவரும் தங்களின் விருப்பமான முடிவை எடுக்கலாம் என கூறி இரண்டு பெண்களும் விடுவிக்கப்பட்டனர்.