குடித்துவிட்டு வந்து கெஞ்சி கேட்ட கணவன்.!!

சேலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் மரம் அறுக்கும் கூலி வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு இரண்டு குழந்தைகளும், ஒரு மனைவியும் இருக்கின்றனர். இவருக்கு அதிக அளவிலான குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு உள்ளது. பாலசுப்பிரமணி வேலைக்கு செல்லாமல் அவரது மனைவியை அடித்து துன்புறுத்தி மாமனார் வீட்டில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு வரச்சொல்லி குடித்துள்ளார்.

இவ்வாறு, கணவனின் தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாத தங்கமணி அடிக்கடி பெற்றோரின் வீட்டிற்கு சென்று விடுவார். இருப்பினும் மாமனார் வீட்டிற்கு சென்று பாலசுப்பிரமணி தகராறு செய்து ஒரு வாரம் வருவார். இனிமேல் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மகளிர் காவல் நிலையத்தில் தங்கமணி புகார் அளித்துள்ளார். இருதரப்பினரையும் நேரில் அழைத்து காவலர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின்னர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் பழையபடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், தங்கமணி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவியை பிரிந்த பாலசுப்பிரமணி தனிமையில் தவித்துள்ளார். அதன் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து செல்ல மாமனார் வீட்டிற்கு சென்று கெஞ்சிக்கூத்தாடி உள்ளார். இருப்பினும் தங்கமணி அவரின் பேச்சை நம்பாமல் வர முடியாது என மறுத்துவிட்டார்.

இதன் காரணமாக பாலசுப்ரமணி ஆத்திரம் அடைந்து அங்கிருந்த அருவாளை எடுத்து தங்கமணி கழுத்தை அறுத்து உள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் தங்கமணி இரத்தம் சொட்ட, சொட்ட அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலறிந்த காவல்துறையினர் தங்கமணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு கொலை செய்த கணவனை தேடிப்பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.