ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது இதில் 151 சட்டமன்ற தொகுதிகளில் ஜெகன் மோகனின் YSR காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. கடந்த முறை ஆட்சி செய்த சந்திரபாபு நாய்டுவின் தெலுங்கு தேசம் கட்சி 24 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது.
முதலமைச்சராக ஜெகன்மோகன் பதவியேற்ற நாள் முதல் ஆந்திர அரசு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்.
ஆந்திர பிரதேசத்தில், சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலத்தின் போது உண்டவள்ளி பகுதியில் பிரஜா வேதிகா என்ற கூட்ட அரங்கம் கட்டப்பட்டது. ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஆட்சி மாற்றம் வந்த பிறகு, அந்த கட்டடத்தை அப்படியே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் ஜெகன் மோகனுக்கு தெலுகு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வரும் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.
சந்திரபாபு நாயுடு வைத்த கோரிக்கையை பொருட்படுத்தாமல், பிரஜா வேதிகா கட்டடம் சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக கூறி அந்த கட்டிடம் முழுவதையும் இடிக்க ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டு. இதனை தொடர்ந்து கட்டடிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது
வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் சென்றிருந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமது பயணத்தை முடித்து கொண்டு நேற்று ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார் அவரை வரவேற்க அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் மற்றும் மருமகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது சந்திரபாபு நாயுடு பிரஜா வேதிகா” இல்லம் இடிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு “மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் பிரஜா வேதிகா இல்லம் கட்டிடம் கட்டப்பட்டது என்றும், அது மக்களுக்கு சொந்தமானது என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய நாயுடு ஆந்திராவில் உள்ள ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டியின் ஆயிரக்கணக்கான சிலைகளை அகற்ற முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.