ஜூலியாக மாறிய அபிராமி! அடுத்த காயத்ரி யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் பெரும் சண்டை நடப்பது இன்றைய ப்ரமோ மூலம் உறுதியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து சண்டைக்கு காரணமானவர்களை நெட்டிசன்கள் விளாச தொடங்கிவிட்டனர்.

இன்று காலையில் வெளியான பிக்பாஸ் ப்ரமோவில் முதலில் அபிராமிக்கும் புதிதாக வந்த மீராவுக்கும் இடையே சண்டை நடக்கிறது.

அப்போது படு திமிராக என்னிடம் பேசாதே என கூறிவிட்டு செல்லும் அபிராமி அந்த சண்டையில் வனிதாவை இழுத்து விடுகிறார்.

இதனால் வனிதாவுக்கும் மீராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதித்துள்ளனர். கூடவே சண்டைக்கு காரணமானவர்களை விளாசியும் வருகின்றனர்.