மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. கட்டிடங்களை இடிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தார். அப்போது பாஜக இந்தூர் தொகுதி எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா தங்கள் ஆதரவுடன் சென்றுள்ளார்.
நகராட்சி அதிகாரிகளை கட்டிடங்களை இடிக்க விடாமல் தடுத்துள்ளார். நகராட்சி அலுவலகருக்கும், ஆகாஷ்க்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஆகாஷ் அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். மேலும் தனது ஆதரவாளர்களுடன் அலுவலர்களை தாக்கினர்.
காவல் துறையினர் தடுக்க முயன்ற போது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதல் குறித்து ஆகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அதிகாரிகள் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆகாஷ் மற்றும் 10 ஆதரவாளர்களை காவல்துறை கைது செய்தனர். மேலும் இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களால் பரவி வருகிறது.