இளைஞர் செய்த பகீர் காரியம்.!! பெற்றோர் அதிர்ச்சி.!!

கோவை மாவட்டம் சின்னதடாகம் புதூரை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவருக்கு கோபாலகிருஷ்ணன் (22) என்ற மகன் இருந்துள்ளார். பெங்களூரில் உள்ள ராஜிவ்காந்தி சட்ட கல்லூரியில் கோபாலகிருஷ்ணன் அஞ்சல் வழியில் 5-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இவர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இவருக்கு மனக்கசப்பு காரணமாக காதலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்தவாறு சாணிபவுடரை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, பின்னர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர்.

அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.