அதிரடியாக புகுந்த ஆளுநரின் செயலணி..! சிக்கினர் அதிபர்..

யாழ்.நகரை அண்மித்ததாக உள்ள பிரபல்யமான பெண்கள் உயர்தர பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி சங்க நிதி என்ற பெயரில் இடம்பெற்ற பாரிய மோசடி அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த பாடசாலையில் உயா்தர வகுப்பு மாணவர்களிடம் பாடசாலை அபிவிருத்தி சங்க நிதி என்ற பெயரில் தலா 1600 ரூபாய் பணம் அறவிடப்பட்டிருக்கின்றது.

எனினும் குறித்த நிதி எதற்காக பெறப்படுகின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்ட வகையில் கூறப்படாததுடன், பெற்றுக் கொண்ட பணத்திற்கு பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் வடமாகாண ஆளுநரின் விசேட செயலணி என அறியப்படும் விசேட அதிகாாிகள் குழு நேற்று முன் தினம் பாடசாலைக்குள் நுழைந்து நடாத்திய சோதனையில்,

பாடசாலை அதிபாின் ஒழுங்கில் நடைபெற்ற இந்த முறைகேட்டு சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ள நிலையில் உடனடியாக பாடசாலை அதிபர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.