உத்தரகாண்ட் பாஜக சட்டமன்ற உறுப்பினரும் அந்த மாநில தொடக்கப்பள்ளி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அரவிந்த் பாண்டேவின் மகன் அங்குர் பாண்டே இன்று அதிகாலை 3 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் பரேய்லி மாவட்டத்தில் உள்ள ஃபரிதாப்பூர் அருகே காரில் தனது நண்பர்களுடன் நண்பரின் திருமணத்துக்காகச் சென்று கொண்டிருந்தார்.
அமைச்சர் மகன் சென்ற கார் அதிகாலை 3 மணியளவில் எதிரே வந்த டிரக்கும் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த நண்பர்கள் இருவரும் உயிரிழந்தனர்.