நீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விஷேட விசாரணைகளை ஆரம்பித்ததாக திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த வெலகெதர இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தார்.
கடந்த மே 4 ஆம் திகதி அசாத் சாலி, நீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், பிரதேச சபையொன்று கூட அனுமதிக்காத பள்ளிவாசல் ஒன்றுக்கு நீதிபதி ஒருவர் தலையீடு செய்து இயங்க தேவையான நடவடிக்கைகளை ஏர்படுத்திக்கொடுத்துள்ளதாகவும் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.