அவசர அவசரமாக காவல் துறையை நாடிய அமைச்சர் சிவி சண்முகம்.!

நேற்று முன்தினம், சென்னையில் நடு இரவில் பழம் ஏற்றுமதி செய்யும் தொழில் அதிபர் ஒருவ, முழு போதையில் காரை ஓட்டி வந்து நின்று இருந்த ஆட்டோ மீது மோதினார். இருந்தும் அதிவேகமாக வந்ததால் கார் நிற்காமல் வேகமாக கட்டுப்பாட்டை இழந்து சுவர் மீது மோதியது.

காவல்நிலையம் அருகில் இருந்தால்,போலீசார் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து பார்த்தனர். அதிவேகமாக வந்து மோதியதால் சொகுசு காரின் ஏர் பலூன் ஓபன் ஆகி ஓட்டிவந்தவரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

பின்னர் போலீசாரை அவரை வெளியில் கொண்டுவந்தனர். ஆனால், அவரோ போலீசாரை கண்டபடி திட்டிகொண்டு அத்துமீறி நடந்து கொண்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அவர் மதுரையை சொந்த ஊராக கொண்டிருப்பவர் என்றும் தெரியவந்தது.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியவர், அமைச்சர் சிவி சண்முகத்தின் மகன் எனக்கூறி பொய் செய்தி ஒன்றை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். இது குறித்து அமைச்சர் சிவி சண்முகம் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் என்னையும்,கைது செய்யப்பட்டவரையும் இணைத்து பேசி வருகின்றனர் என அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.