மாடியில் இருந்து தள்ளிவிட்டார்..கணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கு போட்டியாளர்களாக வந்துள்ளார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற ரோலில் நடித்து அதிகம் பிரபலம் ஆனவர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் அவர் தன் வாழ்க்கையில் நடந்த சோகங்கள் பற்றி பேசியுள்ளார்.

முதல் திருமணம் 18 வயதில் நடந்தது, பெற்றோர் பார்த்து நடந்த திருமணம். அவருக்கு எனக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகவில்லை. மேலும் அவர் என்னை படிக்கவிடவில்லை, சிறையில் இருப்பது போல இருந்தது. அவருடன் ஒரு எனக்கு ஒரு பையன் இருக்கிறான். இனிமேல் முடியாது என விவாகரத்து பெற்றுவிட்டேன். கஷ்டப்பட்டு பையனை வளர்த்தேன்.

இரண்டு வருடம் கழித்து அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டேன். அவருடன் நான் 5 மாதம் கர்பமாக இருந்தபோது என் கணவர் என்னை ஏமாற்றுகிறார் என அறிந்தேன். அவர் என்னை தாக்கிவிட்டு வெளியேறிவிட்டார். நானே கார் எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்ந்து குழந்தையை பெற்றெடுத்தேன். உதவிக்கு வேறு யாரும் இல்லை. என்னுடைய 8 வயது மகன் தான் இருந்தான்.

என கணவர் என்னை ரொம்ப அடிச்சாரு.. மூஞ்சை உடைச்சாரு.. மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.. முட்டி உடைந்துவிட்டது.

இதுவும் சரியாக அமையவில்லை.. டிவோர்ஸ் செய்துவிட்டேன். அவர் நிழல் கூட என் குழந்தைகள் மீது படக்கூடாது என ஜீவனாம்சம் கூட வேண்டாம் என கூறிவிட்டேன் என ரேஷ்மா கூறினார்.

இதை கேட்டு மொத்த பிக்பாஸ் குடும்பமே கண்ணீரில் மூழ்கியது.