தளபதி விஜய்யின் பிறந்தநாள் அண்மையில் சிறப்பாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. உதவி என கேட்டு வந்தவர்கள் பலருக்கும் மகிழ்ச்சியுடன் உதவி செய்வார் என பலரும் கூறியுள்ளார்கள்.
அண்மையில் வந்த புயல், வெள்ள நிவாரணத்திற்கு பெருமளவில் நிதி வழங்கி உதவியதை நீங்களும் அறிவீர்கள் தானே. இது குறித்த செய்திகளும் வெளியாகின.
இந்நிலையில் தற்போது அவர் உயிர் காக்கும் இருதய அறுவைசிகிச்சைக்காக 9 மாத குழந்தைக்கு ரூ 1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.
இது குறித்த சான்றுகள் தற்போது சமூகவலைதளங்களில் புகைப்படங்களாக பகிரப்பட்டு வருகின்றன.