மீரா மிதுன் உடன் என்ன பிரச்சனை? பிக் பாஸ் வீட்டில் நான்காவது நாளே மிகப்பெரிய சண்டை

பிக்பாஸ் மூன்றாவது சீசன் துவங்கி இன்று நான்காவது நாள். நேற்று புதிய போட்டியாளராக சர்ச்சை நடிகை மீரா மிதுன் புதிய போட்டியாளராக வந்துள்ளார்.

ஆரம்பம் முதலே அவருடன் அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் சண்டை போட்டு வருகின்றனர்.

இன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அபிராமிக்கு ஆதரவாக வனிதா வந்தார்.

மேலும் அபிராமி பற்றி ஒரு கதை இருக்கு, அதை நான் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருக்கிறேன் என மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் என்ன பிரச்சனை என்பது இனிமேல் தான் தெரியவரும்.