93 வயது மூதாட்டியின் விநோத ஆசை!

பிரித்தானியாவில் 93 வயது மூதாட்டி ஒருவர் கூறிய விநோத ஆசையை மறைமுகமாக பொலிசார் நிறைவேற்றி கொடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் வசித்து வருபவர் 93 வயது ஜோசி பேர்ட்ஸ். இவர் தன் வாழ்நாளில் அனைத்துவித நல்ல காரியங்களையும் அனுபவித்துவிட்டார்.

அவை அனைத்தையும் நினைத்து தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். ஆனாலும் இவருக்கு ஒரு சிறு குறை இருந்துள்ளது.

தன்னை ஒருமுறை கூட இதுவரை காவல்துறை கைது செய்ததில்லை. அப்படி கைது செய்தால் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்வதே தனது இறுதி ஆசை என, தனது பேத்தி பேம் ஸ்மித்திடம் மூதாட்டி கூறியுள்ளார்.

இதனால் சில நாட்களுக்கு முன்னர் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்நிலையத்திற்குச் சென்ற ஸ்மித், தனது பாட்டியை கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் அதற்கு சட்டத்தில் இடமில்லை எனக்கூறி காவல்துறையினர் மறுத்துள்ளனர். பின்னர் தனது பாட்டியின் கடைசி ஆசையை எடுத்துக்கூறி காவல்துறையினருக்கு புரியவைத்துள்ளார் ஸ்மித்.

அதற்கு சம்மதம் தெரிவித்த காவல்துறையினர், சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் மூதாட்டியை கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் தன்னை கைது செய்ய வந்ததை அறிந்த மூதாட்டி மகிழ்ச்சியுடன் சிரித்துள்ளார். அத்துடன் தனது இறுதி ஆசை நிறைவேறிவிட்டது எனவும் பூரிப்பு அடைந்துள்ளார்.

இதைக்கண்ட காவல்துறையினரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தனது பாட்டியை கைது செய்த காவல்துறையினருக்கு சமூக வலைத்தளத்தில் பேத்தி ஸ்மித் நன்றி தெரிவித்துள்ளார். அந்தப் பதிவை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர்.