மரண தண்டனையை நிறைவேற்ற மைத்திரி கையெழுத்து! உலகின் செல்வந்தர் விடுத்துள்ள கோரிக்கை

“மரண தண்டனை பேரழிவை தரக்கூடிய அதேவேளை, ஒரு போதும் தீர்வாகாது” என உலகின் பெரும் செல்வந்தனர்களில் ஒருவரான Richard Branson தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, Richard Branson தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை கொண்டுவர விரும்புகின்றார் என Richard Branson சுட்டிக்காட்டியுள்ளார்.