இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் 34 வைத்து லீக் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாட உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா இதுவரை 8 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 8 போட்டிகளில் , மேற்கிந்திய தீவுகள் 3 முறை வென்றுள்ளது. இந்தியா அணி 5 முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய போது மேற்கிந்திய தீவுகள் எடுத்த அதிகபட்ச ரன்கள் 282, இந்தியா அணி எடுத்த அதிகபட்ச ரன்கள் 268. இதை போல இந்தியா எடுத்த குறைந்தபட்ச ரன்கள் 174 ஆகும், 140 ரன்கள் தான் மேற்கிந்திய தீவுகள் எடுத்த குறைந்தபட்ச ரன்கள்.
உலகக் கோப்பைப் போட்டியில் கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணியை வெல்ல முடியாமல் போராடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் இந்த முறை அதை மாற்றும் முயற்சியோடு இறங்குகிறது. கடைசியாக 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் பிறகு வெற்றி பெறவே இல்லை.
2015 இந்தியா வெற்றி 4 விக்கெட்ஸ்
2011 இந்தியா வெற்றி 80 ரன்
1996 இந்தியா வெற்றி 5 விக்கெட்ஸ்
1992 மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி 5 விக்கெட்ஸ் (D/L)
1983இந்தியா வெற்றி 34 runs
1983 மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி 66 ரன்
1983 இந்தியா வெற்றி 43 runs
1979 மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி 9 விக்கெட்ஸ்