தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் சண்டை போட்ட இருவர்.!!!

பாகிஸ்தானில் உள்ள ஒரு செய்தித் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் அரசியல் தொடர்பான தலைப்பில் பேசுகையில், பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் – இ- இன்சாப் கட்சி நிர்வாகி மசூர் அலி சியால், கராச்சி பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் இம்தியாஸ் கான் பாரன் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதையடுத்து கோபமடைந்த சியால், இம்தியாஸ் கானை தாக்கினர். பின்னர் அவரும் பதிலுக்கு தாக்கினார். இது அந்த தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் இருவரிடம் நடந்த மோதலை ஒரு வழியாக சமாதானம் செய்தனர். தொலைக்காட்சி நேரலை விவாத நிகழ்ச்சி சண்டை களமாக மாறிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.