ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து 3 தோல்வியை சந்தித்த காரணத்தால் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
தற்போது விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 123 புள்ளிகளையும் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து அணி 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
2019 உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற அவுஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், ஏற்கனவே உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியயேறிய தென்னாப்பிரிக்கா 109 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்துள்ளது.
இப்பட்டியலில் பாகிஸ்தான் 94 புள்ளிகளுடன் 6வது இடத்தையும், வங்கதேச அணி 92 புள்ளிகளுடன் 7வது இடத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் 78 புள்ளிகளுடன் 8 மற்றும் 9வது இடங்களில் உள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஒரு வெற்றியை கூட ருசிக்காத ஆப்கானிஸ்தான் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளது.