இந்தியாவின் ஒடிசாவில் பாம்பு கடித்து உயிரிழந்த பெண்ணை மீண்டும் உயிர் பிழைக்க வைப்பேன் என கூறி மந்திரவாதி செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சப்டஷீலா (40) என்ற பெண் சில நாட்களுக்கு முன்னர் திடீரென வயலில் மயங்கி விழுந்தார்.
அவரின் கையில் கொடிய விஷ பாம்பு கடித்திருக்கலாம் என நினைத்த கணவர் உடனடியாக சப்டஷீலாவை மருத்துமனைக்கு தூக்கி சென்றார்.
அங்கு சப்டஷீலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இதன் பின்னர் அவர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சடலம் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது சப்டஷீலாவின் குடும்பத்தார் மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்தனர்.
அவர் சப்டஷீலாவை உயிர் பிழைக்க வைப்பேன் என கூறி மந்திரங்களை கூறியபடி இருந்தார்.
ஆனால் அவருக்கு உயிர் வரவில்லை, இதை தொடர்ந்து நீங்கள் தாமதமாக என்னை அழைத்து விட்டீர்கள், முன்னரே அழைத்திருந்தால் அவரை பிழைக்க வைத்திருப்பேன் என கூறினார்.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த சப்டஷீலாவின் கணவர் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த சப்டஷீலாவின் கையில் பாம்பு கடித்ததற்கான குறி இல்லை என புகார் எழுந்த நிலையில் இது குறித்து பொலிசார் விசாரித்தனர்.
இறுதியில் அவர் பாம்பு கடித்து தான் இறந்துள்ளார் என பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்தது.