கேரளா கொல்லத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார்.
இந்நிலையில், அவரின் மனைவிக்கு பேஸ்புக் மூலம் அருண்குமார் என்பவருடன் சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
கணவர் வந்து விட்டால் தனது கள்ளக்காதலியுடன் பேச இயலாது என நினைத்த அந்தப் பெண் அதிக அளவிலான நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களுக்கு பிறகு அவரது கணவன் திரும்பி வந்துள்ளார். மனைவி நகை பணத்துடன் இன்னொருவருடன் ஓட்டம் பிடித்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஓடிச் சென்ற மனைவி கள்ளக்காதலனுடன் இணைந்து பல இடங்களுக்கு உல்லாசமாக சென்று விடுதிகளில் தங்கி மொத்த பணமும் தீர்ந்தவுடன் அருண்குமார் அவரை அறையிலேயே அடைத்து வைத்து கொடுமைபடுத்த துவங்கி உள்ளார். அருண் குமாரும் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்து அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.