இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் 34 ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி எஞ்சியுள்ள 4 ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதில் 2 ல் வென்றால் தான் அரை இறுதிக்குள் செல்ல முடியும். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இந்த போட்டியில் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 20,000 ரன்களை அடித்து இந்தியா கேப்டன் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்த சாதனையை விராட் கோலி நிகழ்த்தி உள்ளார்.
முன்பு 453 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா 20,000 ரன்களை அடித்து அதிகபட்ச சாதனையை படைத்தார். அதற்கு அடுத்த இடத்தில் சச்சின் இருந்தார். தற்போது 417 போட்டிகளில் 20,000 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.