துரத்தித்.. துரத்தி மனைவியை அறுத்த கணவன்!!

குடும்பத் தகராறு காணரமாக கணவனால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறித்த தம்பதியர்களிற்கிடையில் தினமும் வாய்த்தர்க்கம் இடம்பெறுவது வழக்கமென அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதுபோலவே இன்றும் அவ்வாறு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் மோதல் முற்றி, கணவன் மனைவியை வீட்டிற்குள் துரத்தி துரத்தி கத்தியால் அவரின் வயிற்றில் குத்தியுள்ளார்.

மனைவிமீது தாக்குதலை நடத்தியபின் அவர் வீட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் மனைவியின் அவலக்குரலை கேட்ட அயலவர்கள், அவரை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.