ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் மினி பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
சோபியான் மாவட்டம் அருகே வந்த மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. அந்த மினி பஸ் திடீரென அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மினி பஸ்ஸில் பயணம் செய்த 9 மாணவிகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
Jammu and Kashmir: 11 people died and 6 were injured after their vehicle fell into a deep gorge near Peer Ki Gali in Shopian district, today. The injured have been shifted to hospital. pic.twitter.com/n0TCH1kxIK
— ANI (@ANI) June 27, 2019