நண்பனை ரத்தவெள்ளத்தில் துடிக்கவிட்டு இளைஞர் செய்த கொடூரம்.!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சமையல் பயிற்சி கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த சவன்க்குமார் என்பவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ஹரிஹர சண்முகம் என்பவரும் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இருவரும் விடுதியில் தங்கி படித்த ஹரிஹர சண்முகத்தின் தங்கை உறவு முறையான ஒருவரைச் சவன்க்குமார் காதலித்துள்ளார். ஹரிஹர சண்முகம் பல முறை எச்சரித்தும், அவர் கேட்கவில்லை. இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று சரத்குமார் அந்தப் பெண்ணிடம் போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹர சண்முகம் கல்லூரி வாசலிலேயே நிறுத்தி தங்கையின் உடனான காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஹரிஹர சண்முகம் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சவன்க்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதன் காரணமாக சவன்க்குமார் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடி துடிக்க உயிரிழந்துள்ளார். இதனால் சக மாணவர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் உள்ளனர். காவல்துறையினர் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.