பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவன் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் நான்கு வயது சிறுமியை “அண்ணனுடன் விளையாட வா” என கூறி அழைத்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் வெகு நேரம் ஆகியும் அந்த சிறுமி வீட்டிற்கு திரும்பாததால், சிறுமியின் தாயார்13 வயது சிறுவனின் வீட்டிற்கு சென்று குழந்தையை தேடியுள்ளார்.
அப்போது அந்த வீட்டினுள் அந்த சிறுவன் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்று வந்தது தெரிந்துள்ளது. இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினர் அனைவருக்கும் தெரிய வர அவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் 13 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எட்டாம் வகுப்பு சிறுவனின் இந்த மோசமான செயலானது, அருகிலுள்ள சிறுமிகளின் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.