நூலகம் அழிவு பாதையில்.! மாணவர்கள் வேதனை.!!

நூலகம் என்பது காணக்கிடைக்காத ஒரு பொக்கிஷம். நூலகம் இருந்தால் இந்த உலகம் உங்கள் கையில் என்று கூறுவார்கள். ஒரு புத்தகம் உங்கள் கையில் இருந்தால் அது சிறந்த அறிவாற்றலுக்கு சமமாகும். இப்படி இதுபோல இன்னும் நூலகத்தின் சிறப்பினை பற்றி கூறிக்கொண்டே போகலாம்.

ஆனால் தற்போது ஒழுகும் மேற்கூரை, எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் கட்டடம், மழையில் ஊறிய புத்தகங்கள் எனப் பரிதாப நிலையில் செயல்பட்டுவருகிறது நீலகிரி, கொலக்கொம்பை கிளை நூலகம்.

இந்த நூலகத்தில் சுமார் ‘ 30,000 புத்தகங்கள், நாளிதழ்கள், வார இதழ்கள் என அனைத்தும் உள்ளன ஆனால்,நன்கு உட்கார்ந்து படிக்க இடம் இல்லை’ என மாணவர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.