ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இளம்பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் சென்ற மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 1-ஆம் தேதி அந்த புது மணப்பெண் கணவரை பிரிந்து திடீரென மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில், 23 நாட்களுக்குப் பின்னர் அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது அவர் ஹரியானாவில் உள்ள ஒரு வீட்டில் தனது தோழியுடன் வாழ்ந்து வந்ததும், இருவரும் ஓரினச்சேர்க்கையாளர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மணமாகிய அந்த பெண் அவரது தோழியை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகவே அவருக்கு கட்டாய திருமணம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.