பணம் திருட பயன்படுத்தப்படும் 7 கூகுள் அப்பிளிக்கேஷன்கள்…..

பிரபல இணைய நிறுவனமான கூகுளின் பல்வேறு சேவைகளை பல மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

முன்னணி நிறுவனமான இருந்த போதிலும் கூகுளின் பயனர்களின் பாதுகாப்பு அவ்வப்போது கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளமை அனைவரும் அறிந்ததே.

அதேபோன்று கூகுள் நிறுவனத்தின் சில அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி பயனர்களிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றதாக அதிர்ச்சி Kaspersky நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கூகுள் கேலண்டர், கூகுள் போட்டோஸ், கூகுள் மேப், கூகுள் ட்ரைவ், கூகுள் ஸ்டோரேஜ், கூகுள் ஃபோம்ஸ் மற்றும் கூகுள் அனாலிட்டிக்ஸ் போன்ற அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தியே இவ்வாறு தீங்கு விளைவிக்கப்படுவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த அப்பிளிக்கேஷன்களின் ஊடாக பயனர்களை கவரும் வகையில் தகவல்களை அனுப்பி பயனர்களிடமிருந்து சாதுரியமாக தகவல்களை பெற்று இவ்வாறு பணம் பறிக்கப்படுவதாக Kaspersky தெரிவித்துள்ளது.