அமமுகவினருக்கு கிடைத்த இன்பதிர்ச்சி!! உற்சாகத்தில் தினகரன்!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் வெளியே வந்தார் . தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவிலிருந்து வெளியே வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அ.ம.மு.க என்ற கட்சியை டிடிவி தினகரன் தொடங்கினர். இதையடுத்து அ.ம.மு.கவுக்கு ஆதரவளித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியையும் எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

அ.ம.மு.க தொடங்கிய நாள் முதல் மக்களவை தேர்தலுக்கு முன்பு வரை கட்சியாக பதிவு செய்யாமலிருந்தால் மக்களவை தேர்தலில் அந்த கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் சுயாட்சியாக கருதப்ட்டனர். இதனையடுத்து மக்களவை தேர்தல் முடிந்தவுடன் அ.ம.மு.கவை கட்சியாக பதிவு செய்யவேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திடம் தினகரன் விண்ணப்பித்திருந்தார்.

இந்தநிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தினகரனின் அமைப்பை, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான பொது அறிவிப்பு இன்று வெளியானது. முக்கிய நிர்வாகிகளான தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் அமமுகவை விட்டு வெளியே சென்ற போதும் அமமுகவை கட்சியாக அதிகார்வப்பூர்வமாக பதிவு செய்ததை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.