தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு காலமானார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக ஜெயலலிதா தீவிர பிரச்சாரம் செய்தார்.
அதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை பயன்படுத்தினார். அந்த ஹெலிகாப்டர் 11 பேர் அமரக் கூடிய வசதி உள்ளது. அந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிறகு ஹெலிகாப்டர் பெரிய அளவில் பயன் படுத்தவில்லை.
கடைசியாக 2018 டிசம்பர் மாதம் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த ஹெலிகாப்டரை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. ஏலத்தின் பொறுப்பை மாநில வணிக கழகத்திடம் ஒப்படைக்கப்படாது. அதன்படி ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரின் அடிப்படை விலை 35 கோடி என நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஏலத்தை எடுக்க ஒருவரும் முன்வரவில்லை. இந்த ஹெலிகாப்டர் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. யாரும் முன்வராததால் ஏல தொகையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.