தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் 28ம் தேதி (இன்று) தொடங்க உள்ளது என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள் பற்றிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள் இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.
மேலும் மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் கேள்வி, பதில் உண்டு எனவும் தெரிவித்த சபாநாயகர்.
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
சட்டப்பேரவை கூட்ட தொடர்பான அட்டவணையை தொடர்பாக சபாநாயகர் தனபால் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, இன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றம்.
இந்நிலையில் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்திலிருந்து திமுக பின் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் ஸ்டாலின் விலகியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த முடிவு திமுக எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.