சென்னையில் உள்ள அண்ணாநகரில் வசிக்கும் கே.என்.பாபு. ரெயில்வே துறையில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இவரும், தமிழக அரசு துறையில் பதவியில் உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அமெரிக்காவில் பணிபுரிகிறார். இளைய மகன் ஷியாம் இவர் கூகுள் நிறுவனத்தில் தன்னுடைய சொந்த முயற்சியால் அந்த இடத்தை அடைந்துள்ளார்.
இவர் 12-ம் வகுப்பு வரை சென்னையில் படித்தார். பின்னர் மேல் படிப்புக்காக ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார். பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.டி.யில் ஐ.எம். டெக் 5 ஆண்டு படிப்பை முடித்தார். படிக்கும் காலத்திலேயே ‘கோடிங்’ தொடர்பான போட்டிகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் போட்டி போவார். அந்த செயல் தான் கூகுள் நிறுவனத்தில் அவர் இடம்பிடிப்பதற்கு காரணமாக இருந்தது என்று அவர் கூறினார்.
ஷியாம் நண்பர் ஒருவர், கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்து, அதில் வெற்றி பெற்றுள்ளார். அவரின் அந்த வழிகாட்டுதலின்படி, கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். இதனால் கடந்த ஜனவரி மாதத்தில் ஆன்லைன் வீடியோ மூலம் நேர்முகத்தேர்வை சந்தித்தார். அதன் பிறகு ஜெர்மன் நாட்டின் கூகுள் நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்வில் நேரடியாக கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.