மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது!

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சந்தேகநபரான கணவர் தப்பியோடிய நிலையில் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – குருநகர், சென்றொக் வாசிகசாலைக்கு அருகில் நேற்று நண்பகல் இந்த விபரீத சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயாரான ஜே.யு.பொலினியா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மனைவியான, சம்பவத்தில் உயிரிழந்த குறித்த பெண்ணுடன் கணவர் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையிலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, கணவர் தலைமறைவாகிய நிலையில் இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிரப்படுத்திய சந்தர்ப்பத்தில் கணவர் சிக்கியுள்ளார்.

ஜோச் எமிலியாம்பிள்ளை என்பவரே கைதாகியுள்ளதுடன், இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.