இறந்தவர்களில் ஒருவரை திரும்ப அழைக்க முடிந்தால் யாரை அழைக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு பெரும்பாலான பிரித்தானியர்கள் ஏக மனதாக ஒருவரின் பெயரை பதிலாக கூறியிருக்கிறார்கள்.
அந்த பெயர் மக்களின் இளவரசி டயானா!
பிரித்தானிய இளவரசி டயானா மீண்டும் வர வேண்டும், அவர் வந்து தன் பேரக்குழந்தைகளைக் கொஞ்ச வேண்டும், தனது தொண்டு நிறுவனங்களின் சேவையை தொடர வேண்டும் என பெரும்பாலான பிரித்தானியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
அவர் இருந்திருந்தால் இந்த திங்கட்கிழமை தனது 58ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார் டயானா.
ஆனால் அவரது வாழ்வுதான் 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி நடந்த விபத்தில் அகோரமாக முடிந்து போனதே!
சரி, டயானாவுக்கு அடுத்து மக்களால் விரும்பப்படுபவர் யார்?
டயானாவைத் தொடர்ந்து சிலர் முன்னாள் பிரதமர் சர்ச்சில் திரும்ப வர வேண்டும் என்றும், வந்து பிரெக்சிட் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
வேறு சிலர், சார்லஸ் டிக்கன்சையும், சிலர் அலெக்சாண்டர் பிளமிங்கையும் திரும்ப அழைக்க விரும்பியுள்ளார்கள்.
என்றாலும் பெரும்பாலானோரின் வாக்கு மக்களின் இளவரசி டயானாவுக்குதான்…