50 பைசா உள்ளிட்ட அனைத்து நாணயங்களும் பணப் பரிமாற்றத்தின் போது வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நாணயங்கள் வாங்க மறுத்தால் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி அந்தந்த காலத்திற்கு தகுந்தாற் போல புதுப்புது நாணயங்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 50 பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் மற்றும் பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. 50 பைசா மற்றும் 10 ரூபாய் உள்ளிட்ட சில நாணயங்கள் செல்லாது என கூறி வாங்க மறுப்பதாக, இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல புகார்கள் வந்துள்ளது.
இதையடுத்து அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களை வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.