அடுக்கடுக்காக ஒரே நேரத்தில் காணாமல் போன, பெண்கள்.!

மயிலாப்பூர் அருகே தனியார் நீட் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கியவாறு, இந்த நீட் தேர்வுபயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில், வேலூரைச் சேர்ந்த சரஸ்வதி மற்றும் செங்கல்பட்டைச் சேர்ந்த கீதாஞ்சலி உள்ளிட்ட மாணவிகளும் தங்கி படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் வெளியில், சென்று வருவதாக விடுதியில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் திரும்பவில்லை. எங்கு சென்றார்கள் என்பது குறித்த விபரங்கள் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மாணவிகளுக்கும், பத்தொன்பது வயது தான் ஆகின்றது. எதற்காக அவர்கள் காணாமல் போனார்கள்? அல்லது கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனாம்பேட்டை அலுவலகத்தைச் சேர்ந்த அனுஷ்கா என்பவர் அவர்கள் ஒரு வயது பெண் குழந்தையுடன் காணாமல் போயுள்ளார்.

அதேபோல், தேனாம்பேட்டை கார்டன் பகுதியில் சித்ர பிரியா என்ற பெண்ணும் அவரது மகன் மற்றும் மகளுடன் காணாமல் போயுள்ளார். இந்த அடுக்கடுக்கான சம்பவங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றனவா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.