வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று அனைத்து கிராம சபைக் கூட்டங்களிலும், கமலஹாசன் உரையாற்றினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் செலவு செய்து கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பதில், மழை நீரை சேகரிப்பது சிறந்த வழியாகும். முறையாக மழை நீரைச் சேமித்து வைத்தால் தண்ணீருக்காக வீதியில் இறங்க வேண்டிய தேவை இருக்காது.
ஒரு வருடமாக ஷவர் தண்ணீரில்தான் குளித்து வந்தேன். ஆனால், இப்போது வாளி தண்ணீரில் மட்டுமே குளிக்கிறேன். வீதியில் இறங்கி மக்கள் பிரச்சனைக்காக போராட எனக்கு பயமே இல்லை. அப்படி பயந்திருந்தால் பிரதமரையும், முதல்வரையும் நான் விமர்சித்து இருக்க மாட்டேன்.
ஆள் சேதமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல், துப்பாக்கிச்சூடு நடக்காமல் அழுத்தமாக மக்கள் குரல் கேட்பதற்கு ஜனநாயக வாய்ப்பு கிராம சபை கூட்டம் தான். மக்களின் குரலை கேட்க விடாமல் அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது.
பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மனநோயாளிகள். சில பேர் என்ன செய்தால் புகழ் கிடைக்கும் என்று அலையும் மோசமானவர்களாக இருக்கின்றனர். கொலை செய்தால் பிரபலமாகலாம், என்றால் கொலையும் செய்வார்கள். அளவுக்கு தனிமைப் பட்டுப் போன மனநோயாளிகள் தூக்கு தண்டனையை அளித்தாலும் இது போன்றவர்களை திருத்த முடியாது.” என அவர் தெரிவித்தார்.