இராமநாதபுரம் நகரில் அரசு மருத்துவமணியானது செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அங்குள்ள சுற்றுவட்டார மக்களுக்கு பிரதான மருத்துவமனையாக இருந்து வருவதால்., இந்த மருத்துவமனைக்கு அதிகளவில் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம்.
இந்த நிலையில்., இந்த மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் வந்து செல்லும் நிலையில்., வெளியூரில் இருக்கும் பெண்கள் பிரசவ தேதிக்கு முன்னதாகவே வந்து தங்கியிருப்பதும்., மருத்துவர்கள் வரும் சமயத்தில் தேவையான சிகிச்சை குறித்து ஆலோசனை பெற்று., சிகிச்சை பெறுவதும் வழக்கம்.
இந்த நேரத்தில்., கர்ப்பிணி பெண்கள் தங்குவதற்கு இடம் பற்றாக்குறையின் காரணமாக அங்கிருக்கும் மரத்தடிகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்கியிருக்கும் சோகம் ஏற்பட்டுள்ளது. தகுந்த உணவுகள் வழங்கப்படாமல் இருப்பதாகவும் குற்றசாட்டுகள் தொடர்ந்து எழுந்தது.
இது தொடர்பான பிரச்சனை பெரிதாகவே இதனை கவனித்த அதிகாரிகளின் நடவடிக்கையில் ரூ.1 கோடி செலவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு., மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு இன்னும் திறப்புவிழா காணாமல் மூடியே உள்ளது. இந்த கட்டிடங்கள் கட்டி சுமார் ஒரு வருடங்கள் ஆகும் நிலையில்., இதனை திறந்து மக்களுக்கு பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இது தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்படவே தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக மருத்துவ இணை இயக்குனர் சகாயம் தெரிவித்தார். இதுமட்டுமல்லாது இதனை கவனித்த மாவட்ட ஆட்சியரும் இது தொடர்பான பிரச்னையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.