மதுவில் தண்ணீருக்கு பதில் இதையா கலந்து குடிப்பது.?

தண்டையார்பேட்டை அருகே துர்காதேவி நகரை சேர்ந்த குணசேகர் (42) என்பவர் ஸ்டீல் பட்டறை ஒன்றில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கமும், மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்ற்ன.

குணசேகர் மட்டும் வீட்டில் தனியாக நேற்று காலை இருந்துள்ளார். அப்பொழுது, அவனுக்கு மதுவில் கலந்து குடிக்க தண்ணீர் தேவைப்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகில் இருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்துள்ளார்.

ஏற்கனவே போதையில் இருந்தால், அது கழிவறை கழுவ வைத்திருந்த அசிட் என அவருக்கு தெரியாமல் போனது. பின்னர் மதுவை குடித்த அவருக்கு சிறிது நேரத்தில் வயிறு எரிந்து, வலியில் துடித்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு வந்த மனைவி என்னவென்று கேட்க, நடந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.