செல்ஃபி எனப்படும் சுயமி (தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக் கொள்வது) காரணமாக இந்தியாவில் மட்டுமே 159 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே 200க்கும் மேற்பட்டோர் இந்த செல்பி மோகத்தினால் பல்வேறு விதமாக உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் செல்பி ஒருவரின் உயிரை காப்பாற்றியது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு உண்மை சம்பவத்தை தற்போது பார்ப்போம். கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவரது மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
வாழ்க்கையை வெறுத்த அந்த வாலிபர் ரயில் முன்னே பாய்ந்து உயிரை விட்டு விடலாம். எனத் துணிந்து ரயில்வே தண்டவாளத்தை அடைந்துள்ளார். யாரும் இல்லாத நேரத்தில் அந்த தண்டவாளத்தில் படுத்தபடி ஒரு செல்பி எடுத்து வாழ்க்கை மிகவும் வெறுப்பாக இருக்கிறது. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். என வாட்ஸ் அப்பில் அந்த புகைப்படத்துடன் அனுப்பியுள்ளார்.
அனுப்பிவிட்டு அதிலேயே படுத்திருந்தவர். அப்படியே உறங்கி விட்டார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக களத்தில் இறங்கியவர்கள் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க உடனடியாக பல குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து தகவல்களை சேமிக்க ஆரம்பித்தனர்.
அந்த செல்பியில் இருந்த ஒரு மைல் கல்லை கொண்டு விசாரித்து, அந்த இடம் சங்கனாச்சேரி ரயில் நிலையம் என தெரிந்து அங்குள்ளோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை நெருங்கி தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.