பிக்பாஸ் போட்டியாளர் மீரா மிதுன் பற்றி பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சில சர்ச்சைகள் கிளப்பி வருகின்றனர். மறுபுறம் அவரை பற்றி வெளியில் ஜோ என்பவர் சில புகார்கள் கூறி வருகின்றார்.
மீரா மிதுனின் உண்மையான பெயர் தமிழ்செல்வி, அவருக்கு திருமணம் ம ஆகிவிட்டது என சர்ச்சை ஏற்பட்டது.
இது பற்றி தற்போது பேட்டி அளித்துள்ள மீரா மிதுனின் அம்மா, ‘அவரின் உண்மையான பெயர் தமிழ்செல்வி தான். ஜோசியர் ராசிப்படி வைத்த பெயர் மீரா மிதுன். திருமணம் நடந்தது உண்மை தான், விவாகரத்தும் முடிந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார்.
நேற்று அந்த நபர் ஏற்படுத்திய சர்ச்சையால் மன உளைச்சலில் நான் தற்கொலைக்கு முயன்றேன் என மீரா மிதுனின் தாய் கூறியுள்ளார்.