பிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் ஒரே அழுகை காட்சிகளாகவே வெளியாகிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை குடும்ப உறுப்பினருடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் வந்த நாள் முதல் வில்லி என்று பெயர் எடுத்த வனிதா விஜயகுமார் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது அவருக்கு குழந்தை பிறந்த தருணம் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இருந்ததாம். பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான விஷயம் கருத்தரிப்பு மற்றும் பிரசவம்.
இந்த இரண்டில் பிரசவம் என்பது பெண்கள் மறு பிறப்பு எடுக்கும் ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. வனிதா வாழ்விலும் அது அவருக்கு மறுபிறப்பாகவே இருந்துள்ளது. இதனை கேட்ட அனைத்து பார்வையாளர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அது மாத்திரம் இல்லை 10 வயதில் அவரின் பிள்ளையை அவரிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும் அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.
என் மகன் என்றாவது என்னை தேடி நிச்சயம் வருவான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.