தமிழகத்தில் பள்ளி மாணவியுடன் நடந்த திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வாலிபர் பதிவிட்டதால், அவரது தாய் மீது கொடூர தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ( 33) இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்து, கடந்த வாரம் திருமணம் செய்தார்.
மாணவியின் உறவினர்கள், இருவரையும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பிரித்து வைத்தனர். இதனால் ராஜசேகர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், மாணவியுடன் நடந்த திருமண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் பதிவேற்றினார்.
பின்னர், விஷம் சாப்பிட்டு மயங்கிய ராஜசேகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, அவரது தாய் லட்சுமி மகனின் மருத்துவ செலவுக்கு பணம் எடுக்க வீட்டிற்கு வந்தார்.
அப்போது அங்கு வந்த மாணவியின் தந்தை, மற்றும் உறவினர் சிவா ஆகியோர் லட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கினர்.
பின்னர் வீட்டில் இருந்த டிவி உள்ளிட்ட பொருட்களை உடைத்தனர்.
இதையடுத்து படுகாயமடைந்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக விசாரித்த பொலிசார் மாணவியின் தந்தை மற்றும் சிவா ஆகியோரை கைது செய்துள்ளனர்.