மோசடியாளர்கள் சிலர் பொலிஸ் அதிகாரிகளாக நடித்து சுவிஸ் பெண்மணி ஒருவரிடம் 3.6 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் கொள்ளையடித்துள்ள சம்பவம் சூரிச்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பொலிஸ் அதிகாரி என தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஒருவர், சூரிச்சைச் சேர்ந்த செல்வந்தரான ஒரு பெண்ணிடம் திருடர் கூட்டம் ஒன்றை பிடிக்கும் விசாரணையில் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த பணக்கார பெண்மணி கணக்கு வைத்திருக்கும் வங்கியிலுள்ள ஊழியர்கள் சிலர், அவரது பணத்தை திருட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அந்த போலி பொலிஸ் அதிகாரி.
தங்கள் விசாரணையை ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு அந்த பெண்ணை கேட்டுக் கொண்டுள்ளனர் அந்த மோசடியாளர்கள்.
அவரது வங்கியிலுள்ளவர்கள் அவரது பணத்தை திருடுவதிலிருந்து தப்பிப்பதற்காக, அவரது கணக்கிலுள்ள பணத்தை புதிய கணக்கு ஒன்றிற்கு மாற்றுமாறு அவரை அந்த மோசடியாளர்கள் அறிவுறுத்த, அந்த பெண்ணும் தனது பணத்தை அந்த புதிய கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
பின்னர் தனது பணம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.
3.6 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகளை புதுமையான முறையில் மோசடி செய்து ஏமாற்றிய கும்பலை பொலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.